உக்ரைன் ரஷ்யா போர் எதிரொலியாக, தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரனுக்கு 616 ரூபாய் அதிகரித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் உலக அளவில் பங்குச் சந்தைகள் சரிவை கண்டுள்ளன. இதன் காரணமாக தங்கம், கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 616 ரூபாய் உயர்ந்து, 39 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 1 ரூபாய் 90 காசுகள் உயர்ந்து, ஒரு கிலோ 71 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலையேற்றம் நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.