மலை கோவில்களுக்கு ரோப் கார் அமைக்கும் பணி – தமிழகம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில்  துறையின்  அமைச்சர் சேகர் பாபு  தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோவில்களில் உள்ள இணை ஆணையர்கள், மண்டல துணை ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கு  முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:

451 கோவில்களுக்கு திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு நடத்தவது , 87 கோவில்களுக்கு அறங்காவலர் நியமிப்பது  மற்றும் பழனி உட்பட 5 திருக்கோயில்களை மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது எனவும், சமீபத்தில் பெய்த மழையால் பல கோயிலில் தண்ணீர் தேங்கியிருந்த நீரை அகற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது எனவும், தமிழகத்தில் உள்ள  மலை கோவில்களில் அடுத்த 5 ஆண்டுகளில்  ரோப் கார் அமைக்கும் பணியை அரசு மேற்கொள்ள உள்ளது எனவும், மதுரவாயல் கைலாசநாதர் கோவிலில் புதிதாக குளம் அமைக்க திட்டமிட்டுள்ளது எனவும்,  தமிழகத்தில்  உள்ள கோவில்களின் அனைத்து குளங்களும் தூர்வாரும் பணி நடத்தப்படும் எனவும், அதில் 40 குளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது எனவும், இந்த ஆண்டுக்குள் அந்த 40 குளங்களும் சீர் செய்யப்படும் எனவும் கூறினார்.

மேலும் பேசிய அவர்,

சிலை கடத்தல் தடுப்பு பிரிவை முதல்வரின் கட்டுப்பாட்டில்  பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், உள்துறை வாயிலாக வெளிநாட்டில் உள்ள சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், சிலைகள் கடத்தப்படுவதை தடுக்க 2018-19ல் ஸ்டிராங் ரூம் அமைக்க திட்டமிடப்பட்டது, ஆனால் கடந்த ஆட்சியில் அமைக்கவில்லை எனவும்,

திமுக ஆட்சியில் தற்போது வடபழனி முருகன் கோவிலில்  ஒரு ஸ்டிராங் ரூம் அமைக்கப்பட்டுள்ளது, விரைவில் தமிழகம் முழுவதும்  உள்ள அனைத்து கோவில்களிலும் ஸ்டிராங் ரூம் அமைக்கப்பட உள்ளதாகவும்,  ஜனவரி மாதம் இறுதிக்குள் வடபழனி முருகன் கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய கும்பாபிஷேகம் நடத்தப்படும்,  மழையின் காரணமாக பணிகள் சற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, விரைந்து முடித்து கும்பாபிஷேக தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!