கடத்த முயன்ற 1,364 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

சென்னை விமானநிலையத்தில் மலேசியா சரக்கு விமானத்தில் கடத்த முயன்ற 1,364 நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். சென்னையிலிருந்து மலேசியா  தலைநகா் கோலாலம்பூருக்கு செல்லும் சரக்கு விமானத்தில் ஏற்ற வந்திருந்த பாா்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் போில் சோதனை செய்தனா். அப்போது அந்த பார்சலில் உயிருடன் இருக்க கூடிய 1,364 -நட்சத்திர ஆமைகள் இருந்ததை கண்டு சுங்கத்துறை அதிகாரிகள் அதிா்ச்சியடைந்தனா்.இதையடுத்து நட்சத்திர ஆமைகள் இருந்த பாா்சல்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் போலி முகவரியை பயன்படுத்தி,கடத்தல் கும்பல் இந்த நட்சத்திர ஆமைகளை மலேசியாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

Translate »
error: Content is protected !!