அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் லாட்-பீபிள்ஸ் ஸ்டேடியத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது திடீரென ஸ்டேடியத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர். ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர்கள் தப்ப முயன்றனர். இதைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள் பாதுகாப்பிற்காக படுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். மொபைல் சிட்டி போலீசார் 2 சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.