ஓமன் நாட்டில் வேலை கிடைக்காமல் உணவின்றி தவிக்கும் தமிழக பெண், தன்னை மீட்குமாறு கண்ணீர் மல்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த அசேன்புரா பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபிக் என்பவரது மனைவி சபீனா.
இவர் வீட்டு வேலைக்காக, மாதம் 40,000 ரூபாய் ஊதியத்திற்கு தெரிந்த நபர் மூலம் ஓமன் சென்றுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு பணி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் உணவின்றி தவிக்கும் சபீனா, தன்னை தமிழக அரசு மீட்க வேண்டும் என கண்ணீர் மல்க வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார்.