“தமிழ்நாடு” என்ற எழுத்துக்கள் வடிவில் கட்டப்பட்ட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் கட்டப்பட்ட கட்டிடங்கள் “ தமிழ்நாடு ” என்ற எழுத்துக்கள் வடிவில் இருக்கும் நிலையில் இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1981, செப்டம்பர் 15 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழ் மொழி, பண்பாடு போன்ற துறைகளில் உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது.

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் எழுப்பப்படும் புலக்கட்டடங்கள் அவற்றின் உருவ அமைப்பில் “தமிழ்நாடு” என்ற சொல்லின் எழுத்துக்களைப் போன்று வடிவமைக்கப்படும்.அவ்வகையில் தமிழ்நாடு என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களைக் குறிக்கும் நிலையில் ஒவ்வொரு எழுத்துக்கும் (த, மி, ழ், நா, டு) ஒவ்வொரு கட்டடம் அமையும். ‘த’ வடிவக்கட்டடத்தில் கலைப்புலத்துறைகளும், ‘நா’ வடிவக் கட்டடத்தில் சுவடிப்புலத் துறைகளும் அமையும். ‘ழ்’ வடிவக் கட்டடத்தில் மொழிப்புலம் செயல்பட்டுவருகிறது. ‘மி’ வடிவக் கட்டடத்தின் கட்டுமானம் முடிவடைய உள்ளது. இதில், அறிவியல் துறைகள் கொண்டுவரப்படவுள்ளன. ‘டு’ வடிவக் கட்டடம் இறுதிக்கட்டத்தையடைந்தது. ‘டு’ வடிவக்கட்டடம் அண்மையில் திறக்கப்பட்டது. தற்போது ‘மி’ வடிவத்திலுள்ள அறிவியல் புலக்கட்டடம் 8 பிப்ரவரி 2016இல் திறக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!