நாடு முழுவதும் ஒரே நாளில் 6 ஆயிரத்து 396 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டின் கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 0.69 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் 201 பேர் தீவிர தொற்று பாதிப்புக்கு பலியாகியிருப்பதாகவும், 13 ஆயிரத்து 450 பேர் பாதிப்பு நீங்கி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 69 ஆயிரத்து 897 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 178 கோடியே, 29 லட்சத்து 13 ஆயிரத்து 60 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.