90 முறை கொரோனா தடுப்பூசியை செலுத்திய முதியவர்

 

ஜெர்மனியில் முதியவர் ஒருவர் முறைகேடாக 90 முறை கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பூசிகளை செலுத்த கோரி உலக நாடுகள் மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும்,   பக்கவிளைவுகளை கண்டு அஞ்சி பலரும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

அந்தவகையில், ஒரு சிலரின் பயத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டுள்ளார் கிழக்கு ஜெர்மனியை சேர்ந்த முதியவர் ஒருவர்.  தடுப்பூசி செலுத்த பயப்படுவோருக்கு பதில் தானே   தடுப்பூசி செலுத்திக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு போலி தடுப்பூசி சான்றிதழையும் வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் சாக்சோனியில் உள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி  செலுத்த வந்தபோது அவரை பிடித்த அதிகாரிகள், உண்மையை அறிந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். இதுவரை அந்த முதியவர் வெவ்வேறு நிறுவன தயாரிப்பிலான 90 தடுப்பூசிகளை செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!