கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. அதனால் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. மேலும் இதற்காகவே பிரத்யேகமாக படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ ஓடிடி தளத்திற்காக தயாராகும் ‘டோண்ட் லுக் அப்’ படத்தில் நடிக்கிறார். ஹீரோயினாக ஜெனிபர் லாரன் நடிக்கிறார்.
இப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ இந்திய மதிப்பில் 223 கோடி ரூபாய் சம்பளம் வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெனிபர் லாரன்சுக்கு 180 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாக கூறப்படுகிறது. இப்படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.