கொரோனா தொற்றை கண்டறியும் RT PCR பரிசோதனையின் கட்டணம் சராசரியாக 500 ரூபாய் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் கட்டணங்கள் ஒரே மாதிரியாக இல்லை என்பதை சுட்டிக்காட்டி உறுப்பினர் ஒருவர் எழுப்பியிருந்த கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், ஆர்டிபிசிஆர், துரித ஆர்டிபிசிஆர் ஆகியவற்றின் விலை நிர்ணயங்களை அந்தந்த மாநில அரசுகளை பெரும்பாலும் வகைப்படுத்துவதாகவும் விமான நிலையங்களில் இத்தகைய பரிசோதனைகளை எடுக்கும்பொழுது பயணிகள் காத்திருக்கும் நேரம் அவர்கள் வரக்கூடிய நாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு சராசரியாக 500 ரூபாயும் துரித ஆர் டி பி சி ஆர் பரிசோதனைக்கு 1975 ரூபாயிலிருந்து 3,000 ரூபாய் வரை சராசரியாக நிர்ணயிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.