ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்டவிரோதமானது – அகமது மசூத்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டுமக்கள் அங்கிருந்து தப்பி செல்கின்றனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்டவிரோதமானது என்று தேசிய கிளர்ச்சிப் படையின் தலைவர் அகமது மசூத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மக்கள் தலிபான்களுக்கு எதிராக எழுச்சிபெறுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC), ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஐக்கிய நாடுகள் சபை (UN), பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SARC), ஷாங்காயின் அமைப்பு, மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு போன்ற அமைப்புகள் தாலிபான்களுக்கு ஒத்துழைக்க வேண்டாம் அகமது மசூத் கேட்டுக்கொண்டார்.

Translate »
error: Content is protected !!