“பிக்பாஸ் 5” நிகழ்ச்சியின் முக்கிய அப்டேட் வெளியாக போகுது..!

தமிழில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி “பிக்பாஸ்”. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், “பிக்பாஸ் 5” நிகழ்ச்சியின் புரமோஷன் போட்டோ ஷூட் இன்று நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வாரத்திற்குள் “பிக்பாஸ் 5” ப்ரோமோ வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சீசனில் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

மேலும் “பிக்பாஸ் 5” நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் தேர்வு இறுதி கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. சினிமா பிரபலங்கள் இந்த சீசனில் அதிகம் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

 

 

Translate »
error: Content is protected !!