கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்படும் பஸ் நிலையம்.. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும்

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக கிளம்பாக்கத்தில் 393 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படுகிறது.

அதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பேருந்து நிலையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் 336 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!