நாட்டில் மொத்தம் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 160 கோடியாக உயர்வு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், நாட்டில் மொத்தம் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 160 கோடியாக உயர்ந்துள்ளது என கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், பிரதமர் மோடி தலைமையில் கீழ் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி செலுத்தும் பணியானது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 160 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

Translate »
error: Content is protected !!