திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கிணற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
மேற்கு பல்லடம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்குள்ள கிணற்றில் பார்த்த போது மகேந்திரன் நீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
மேலும் அங்கு தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு மகேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.