லெபனான் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் இரவு ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் பிராஸ் அபியாட் பிறப்பித்துள்ளார்.
இதன்படி டிசம்பர் 17ஆம் தேதி முதல் ஜனவரி 9ஆம் தேதி வரை இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வெளியே வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கும் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக லெபனானில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி லெபனானில் 6,72,548 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் 8,735 பேர் உயிரிழந்துள்ளனர்.