உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தின் போது விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த ஒன்றிய இணை அமைச்சர் மற்றும் அவர் மகனை கைது செய்ய வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒன்றிய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியா முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக
உத்திர பிரதேசம் மாநிலத்தில் நேற்றைய தினம் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தூண்டுதலில் பேரில் அவர் மகன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் மீது காரை ஏற்றியத்தில் 8 விவசாயிகள் உயிர் இழந்தனர்.
அதற்கு கண்டனம் தெரிவித்தும் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும், அவரையும் அவரின் மகனையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அச்சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி அண்ணாமலை நகர் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மனித எலும்பு கூடுகளை வைத்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.