உருமாறி வரும் கொரோனாவுக்கு எதிராக ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும், மரபணு மாறிய கொரோனாவுக்கு எதிராக இரு டோஸ் செலுத்திக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வளர்ந்த நாடுகளில், முதிய குடிமக்களின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்யும் நோக்கில், குறிப்பிட்ட காலக்கெடுவில் மூன்று, நான்கு பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் ஜெருசலேமில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதுகுறித்து பேசிய பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா, ஒமிக்ரானுக்கு எதிராக பைசர் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டார். இது உயிரிழப்புகளிலிருந்து பாதுகாக்க பெரிதும் உதவுவதாக குறிப்பிட்ட அவர், அவ்வப்போது பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு பதில், ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்திக்கொள்வது சிறந்தது என கூறியுள்ளார்.