கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கடும் உயர்வு…!

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில், ஒரு கிலோ முருங்கைக்காய், 270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.40க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.120க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் கத்தரிக்காய் ரூ.40 முதல் ரூ.100 வரையிலும், வெண்டைக்காய் ரூ.40 முதல் ரூ.100 வரையிலும், பீன்ஸ் ரூ.50 முதல் ரூ.100 வரையிலும், அவரை ரூ.60 முதல் ரூ.100 வரையிலும், கேரட் ரூ.50 முதல் ரூ.90 வரையிலும், பீட்ரூட் ரூ.40 முதல் ரூ. 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!