வைரஸ் பரவல்: தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகளா..? – முதலமைச்சர் மீண்டும் ஆலோசனை

ஒமைக்ரான் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்,

கொரோனா தடுப்புக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இரவு நேர ஊரடங்கு உத்தரவு, பொங்கல் கொண்டாட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விழாக்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளைத் தவிர மற்ற வகுப்புகள் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படலாம் என்பது குறித்தும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Translate »
error: Content is protected !!