டபுள் அப்டேட் கொடுத்த விஷால்

விஷால் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியிருப்பதாகவும், விரைவில் வெளியிடப்படும் என்றும் விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!