ஸ்பெயினில் உள்ள கனரி தீவுகளில் ஒன்றான லா பால்மா தீவில் உள்ள ஹம்ரி விஜா எரிமலை நேற்று திடீரென வெடித்து எரிமலை குழம்பு வெளியேறத்தொடங்கியது. வெளியேறிய எரிமலை குழம்பு பொதுமக்கள் வசிக்கும் இடங்களை நோக்கி வந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். இதுவரை, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.