நெல்லையில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சுவர் இடிந்து விழுந்து விபத்து – அமைச்சர் அன்பில் மகேஷ்

நெல்லையில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும், அஸ்திவாரம் இல்லாமல் கழிவறை கட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்களின் தரம் குறித்து ஆய்வு செய்து, இம்மாத இறுதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள தரமற்ற பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு பதில் மாற்று இடங்களில் வகுப்புகள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!