குஜராத்தின் புதிய முதல்வர் யார்.. தலைமை முடிவு செய்யும்… ராஜினாமாவுக்கு பிறகு விஜய் ரூபானி பேட்டி

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளார். அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் ரூபானி கூறியது,

குஜராத்தின் முதல்வராக பணியாற்ற எனக்கு இந்த வாய்ப்பை அளித்ததற்காக பாஜகவுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எனது ஆட்சிக் காலத்தில், பிரதமர் மோடியின் தலைமையில் மாநிலத்தின் வளர்ச்சியைச் சேர்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. மாநில நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன்.புதிய செயல்முறைக்கு புதிய தலைமை தேவை. குஜராத்தின் புதிய முதல்வர் யார் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும் என்று விஜய் ரூபானி கூறினார்.

Translate »
error: Content is protected !!