விண்வெளி ஆய்வு நிலைய பணிகள் நடப்பாண்டில் நிறைவடைந்து விடும் என சீனா தெரிவித்துள்ளது. உலக நாடுகளுக்குப் போட்டியாக விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சீனா சொந்தமாக சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. இதன் பணிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் பணிகள் நிறைவடைந்த உடன் நடப்பாண்டிலேயே செயல்பட தொடங்கிவிடும் என சீனா தெரிவித்துள்ளது. மேலும் நடப்பாண்டில் 40 விண்வெளி ஏவுகணைகளை விண்ணில் ஏவ சீனா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, ஒரு பெண் உட்பட மூன்று விண்வெளி வீரர்கள், சுற்றுப்பாதையில் ஆய்வு நிலையத்தை உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ரஷ்யாவின் சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகளுக்கு சீன விண்வெளி நிலையம் போட்டியாக அமையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.