உலகளவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திய எண்ணிக்கை 708 கோடி

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 247,824,488 பேர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 224,523,241 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 50,20,127 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் 708 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 302 கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 52.02 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகளவில், சீனாவில் 224.9 கோடி தடுப்பூசிகளும், இந்தியாவில் 107.19 கோடி தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளன.

Translate »
error: Content is protected !!