சேமிப்பு, காப்பீடு செய்வதில் இளைஞர்கள் ஆர்வம்

கொரோனா எதிரொலியாக, இளம் தலைமுறையினர் மத்தியில் சேமிப்பு, காப்பீடு செய்வதில் ஆர்வம் அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இளைஞர்கள் மத்தியில் பெரியளவில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. பெரும்பாலான இளைஞர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேமிப்பு, காப்பீடு தொடர்பான விஷயங்களில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 52 சதவீதம் பேர் தங்கள் சேமிப்பை அதிகமாக்கி உள்ளதாகவும், 32 சதவீதம் பேர் மருத்துவ காப்பீடு பெற்றிருப்பதாகவும் ஆய்வில் தெரிவிவந்துள்ளது. வீட்டில் இருந்தே பணியாற்றுவதால், ஆரோக்கியம் மீதான அக்கறை அதிகரித்துள்ளதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!