தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இக்கோவிலானது திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக மலையை சுற்றி கிரிவலப் பாதையுடன் அமைந்துள்ளதால் இந்த கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இன்று இக்கோவில் மகா கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. இந்த கார்த்திகை தீப திருவிழா நிகழ்சியில் தமிழக துணை முதலவர் ஓ.பன்னீர்செலவம் அவர்களின் சார்பாக 500 கிலோ நெய் கொப்பரையில் ஊற்றப்பட்டு பின்பு சிறப்பு வழிபாடுகளை செய்து மகா கார்த்திகை தீபத்தை தமிழக துணை முதல்வர் ஒ.பன்னிர்செல்வதின் மகன் ஜெயபிரதீப் ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து சொக்கப்பனை கொழுத்தும் நிகழ்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கைலாசநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபேற்றது. மகா கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கைலாசநாதரை வழிபட்டனர். இதனால் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.