அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்.. துயரத்தில் அதிமுக தொண்டர்கள்

அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் (வயது 80) கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடைந்தார்.

இருப்பினும் உடல் நலக்குறைவு காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மதுசூதனனின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. பின்னர் அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் நான்கு மணி அளவில் காலமானார். மேலும் இவரது மறைவு அதிமுக தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!