கன்னியாகுமரி அருகே அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் கல் மண்டபம் திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் கல் மண்டபம் திருட்டு தொடர்பாக தமிழக சிலை கடத்தல் திருட்டுத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாரில், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உள்ளது. இது பல நுாற்றாண்டு பழமை வாய்ந்த கோவிலாகும். இங்குள்ள திருவிதாங்கூர் சமஸ்தானம் திருவிதாங்கூர் மகாராஜா வழிபட்ட ஸ்தலமாகும். 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழம்பெருமை வாய்ந்த இந்த கோவில் இந்து மதத்தில் வைணவர்களால் 108 திவ்விய தேசங்கள் என சிறப்பித்து கூறப்படும் ஸ்தலங்களில் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலும் இதுவும் ஒன்றாகும். மாநில மறு சீரமைப்பிற்கு பிறகு இந்த கோயில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் தொன்மையான கலைநயம் மிக்க நூற்றுக்கணக்கான கல்துாண்களால் ஆன மண்டபங்கள் அமைந்துள்ளன.

கடந்த 1992ம் ஆண்டு முதல் 1995ம் வருடத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இக்கோவில் உள்ள 4 கல்துாண்களை திருட முயற்சி நடந்துள்ளது. ஆனால் அதில் இரண்டு கல்துாண்களை மட்டும் திருடி மர்ம நபர்கள் சென்னைக்கு கொண்டு வந்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் சென்னை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஏடிஜிபி அபய்குமார்சிங் உத்தரவின் பேரில் ஐஜி அன்பு மேற்பார்வையில் அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அதனையடுத்து இந்த திருட்டு தொடர்பாக நேற்று சிலை திருட்டு தடுப்புப்பிரிவு போலீசார் 457 (2), 380 (2), 411 (2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Translate »
error: Content is protected !!