சர்ச்சையில் சிக்கினார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பி.சி.சி.. ஸ்பான்சர் நிறுவனத்தில் விராட் கோலி முதலீடு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்படுகிறார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான அவர், விளம்பர வருமானம் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்.

இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி..) ஸ்பான்சர் நிறுவனத்தில் விராட் கோலி முதலீடு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.பெங்களூரை தலைமை இடமாக கொண்டு கேலக்டஸ் பன்வேர் டெக்னாலஜி நிறுவனம் செயல்படுகிறது. ஆன்லைன் விளையாட்டு செயலியான மொபைல் பிரீமியர் லீக் இந்த நிறுவனத்துக்கு சொந்தமானது. இதில் விராட் கோலி, விளம்பர தூதராகவும் இருக்கிறார்.

மேலும் அந்த நிறுவனத்தில் முதலீடும் செய்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விராட் கோலி 2019-ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். இந்த தகவல் தற்போதுதான் வெளியாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வாரியம் விராட் கோலியிடம் விளக்கம் கேட்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!