ஜித் என்ற இந்திப் படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை மன்னாரா சோப்ரா. இவர் இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி உறவுமுறை ஆவார். சில தெலுங்கு படத்திலும், ஒரு கன்னட படத்திலும் மன்னாரா சோப்ரா நடித்தார். தமிழில் வெளியான ‘காவல்’ படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார்.
தற்போது வாய்ப்புகள் எதுவும் இன்றி இருக்கும் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைதளங்களிலும், மக்கள் தொடர்பாளர்கள் மூலம் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு அனுப்பி உள்ளார். ஹீரோயின் என்று இல்லாமல் தனக்கு பொருத்தமான கேரக்டர் எதுவாக இருந்தாலும் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம் இவர்.