டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ரெயில்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.
மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்களும், பல்வேறு அமைப்புகளும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் திருச்சி ஜங்சன் ரெயில்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடபட்டனர், திருச்சி பாரதியார் சாலையிலிருந்து பேரணியாகப்புறப்பட்டு வந்து ஜங்சன் ரெயில்நிலையத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர்.
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவே இந்த சட்டங்கள் இயற்றப்பட்டதாகவும், உழவர்களின் நிலங்கள் பறிக்கப்படுவதுடன், கொள்முதல் நிலையங்கள் செயல்படாது மேலும் நியாயவிலைக்கடைகளும் தமிழகத்தில் இருக்காது என்றும் இந்த சட்டங்களால் பெரிதும் பாதிப்பு ஏற்படும், விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சட்டங்களை திரும்பபெறும்வiரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்என எச்சரிக்கை விடுத்தனர்.