தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூவாரத்திற்கும் கீழ் குறைந்து, இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,06,136 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 35 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,893 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை நகரில் இன்று ஒரேநாளில் 779 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.95 லட்சமாக அதிகரித்துள்ளது.
பிற மாவட்டங்களை பொருத்தவரை, செங்கல்பட்டு மாவட்டத்தில் 169, திருவள்ளூரில் 165, காஞ்சிபுரத்தில் 140, கோவையில் 287, திருப்பூரில் 101, சேலத்தில் 148 பேருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 4,024 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,63,456 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 31,787 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஜூன் 24ம் தேதி 2,865 ஆக இருந்த பாதிப்பு, 4 மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் மூவாயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
—