தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவி ஏற்பு.. தொண்டர்கள் இணிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாட்டம்

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.. ஸ்டாலின் பதிவி ஏற்றதை திமுக தொண்டர்கள் இணிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாட்டம்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக அதிக இடங்களை பெற்றதை அடுத்து இன்று தமிழக முதலவராக திமுக தலைவர் மு.. ஸ்டாலின் முதலமைச்சராக பதிவி ஏற்றார்.

இதனை கொண்டாடும் விதமாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள திமுக தொண்டார்கள் தென்கரை காந்தி சிலை, வடகரை பேருந்து நிலையம், அரண்மனைத்தெரு உள்ளிட்ட இடங்களில் சாலையில் சென்ற பொதுமக்கள், பேருந்து பயணிகள், இருசக்கரத்தில் சென்ற பயணிகள், வணிகர்கள் என அனைவருக்கும் இணிப்புக்கள் வழங்கியும் வெடி வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் செந்தில்குமார், பாசித் ரகுமான், அப்துல் மஜீத், கார்த்திக், ஆரிப்ரகுமான், முத்தையா, சரவணன், சக்திவேல், சல்மான் ,பாலா ,காதர், தமிழ், குரு, குருமூர்த்தி, சித்திக் பாசில் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்,.

Translate »
error: Content is protected !!