திருப்பதியில் ஒரே நாளில் 4 கோடியே 39 லட்ச ரூபாய் உண்டியல் வசூல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 4 கோடியே 39 லட்ச ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இருப்பினும் திருவிழா காலங்களில் அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு நெறிமுறைகளான சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

கொரானா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 42 ஆயிரத்து 825 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதன் மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் 4 கோடியே 39 லட்சம் ரூபாய் உண்டியலில் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது. இன்று வைகுண்ட துவாதசியையொட்டி, இன்று காலை ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பக்தர்கள் இல்லாமல் அதிகாரிகள், அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தினர்.

 

Translate »
error: Content is protected !!