தோனி சொன்ன அந்த இரண்டு பேர் யார்? உண்மையை கூறிய சிஎஸ்கே சிஇஓ..!

சென்னை,

 சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்த இரண்டு வீரர்கள் குறித்து அணியின் சிஇஓ காசி விசுவநாதன் பேட்டி அளித்து இருக்கிறார். 2021 ஐபிஎல் ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வெளிநாட்டு வீரர்கள் நினைத்தபடி அதிக தொகைக்கு சென்று இருக்கிறார்கள்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆரோன் பின்ச் போன்ற வீரர்கள் ஏலம் எடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். சிஎஸ்கே மொத்தம் 6 வீரர்களை எடுத்துள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ஏலத்தை சிலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். மொயின் அலியை எடுத்தது ஓகே. மற்ற வீரர்களை எடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. சிஎஸ்கே அணியின் ஏலம் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் இதை சிலர் பாராட்டவும் தொடங்கி உள்ளனர். கே கவுதம் இந்த தொடர் மூலம் தன்னை நிரூபிக்க முடியும்.ஆனாலும் அவருக்கு 9.25 கோடி ரூபாய் எல்லாம் கொடுத்தது தவறான விஷயம் என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த ஏலத்தில் கவுதமை எடுக்க சொன்னது தோனிதான் என்கிறார்கள். இது குறித்து பேட்டி அளித்துள்ள சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், தோனி எங்களிடம் இரண்டு வீரர்களின் பெயர்களை கொடுத்தார். கவுதம் பெயரும், ஜலாஜ் சக்சேனா பெயரும் இருந்தது.

இரண்டு பேருமே அனுபவ வீரர்கள். ஆப் ஸ்பின் பவுலர்கள். இதில் கவுதம் பெயர் முதலில் வந்தது. அதனால் அவரை எடுத்தோம். அவருக்காக எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று நினைத்தோம். அவருக்கு தகுதி இருக்கிறது, என்று காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

மொத்தத்தில் சிஎஸ்கே மேக்ஸ்வெல், மொயின் அலி, சக்ஸேனா, கவுதம் ஆகிய வீரர்களை தவிர வேறு யாரையும் குறி வைக்கும் எண்ணத்திலேயே இல்லை என்று கூறப்படுகிறது. தோனி இவர்களை தவிர வேறு யாரையும் எடுக்க வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது.

 

Translate »
error: Content is protected !!