”பாக்சிங் டே” டெஸ்ட்: 3னாவது போட்டியில் இந்திய அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட்

பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில்  91.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. மழை பெய்ததால் முன்கூட்டியே 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. ரஹானே 104 ரன்களுடனும் (200 பந்து, 12 பவுண்டரி), ஜடேஜா 40 ரன்களுடனும் (104 பந்து, ஒரு பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில்,  3 ஆம் நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் கேப்டன் ரகானே (112 ரன்கள்ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். இதையடுத்து, இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதில் அதிகபட்சமாக ஜடேஜா 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்இறுதியில் இந்திய அணி 115.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் ஆஸ்திரேலியா அணியை விட இந்திய அணி 131 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக நாதன் லைன் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும், ஹேசில் வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். தற்போது ஆஸ்திரேலியா அணி 8 ஒவர்களில் ஒருவிக்கெட்டை இழந்து 13 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

 

Translate »
error: Content is protected !!