பிப்ரவரி22 ஆம் தேதி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மாசி தெப்ப திருவிழா…முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மாசி தெப்ப திருவிழா வருகின்ற பிப்ரவரி22 ஆம் தேதி நடைபெறுகிறது அதனை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று நடைபெற்றது .

108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இக்கோயிலில் மாசி மாதத்தில் 9- நாட்கள் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் திருப்பள்ளியோடத் திருவிழா எனும் மாசி தெப்பத்திருவிழா வருகிற 15-ம் தேதி தொடங்க உள்ளதுஅதனை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடைபெறும் மண்டபத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று நடைபெற்றது

இதில் அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் பட்டாச்சார்யார்கள் முன்னிலையில் முகூர்த்தக்கால் பூஜிக்கப்பட்டு பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்கிட முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் ஏராளமான கலந்துக்கொண்டனர்.

ஒன்பது நாட்கள் நடைபெறும் மாசித் திருவிழா வரும் 15ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவின் நான்காம் திருநாள் நாள் வெள்ளி கருட சேவையும், எட்டாம் திருநாள் தெப்ப உற்சவ திருவிழாவும், விழாவின் நிறைவு நாளான ஒன்பதாம் நாள் பந்த காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

Translate »
error: Content is protected !!