பொதுமக்களே யூனிட் அளவை கணக்கிட்டு மின் கட்டணம் கட்டுவது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட்டு கட்டணம் செலுத்துமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், சேலத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சேலத்தில் இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சில முடிவுகள் எங்களுக்கு தெரியவந்தது. அதன்படி கொரோனா பரிசோதனை செய்த 24 மணி நேரத்திற்குள் சோதனை முடிவை வெளியிட முடிவெடுத்துள்ளோம். அவர்கள் குறித்த தகவல்களை கண்காணிக்கும் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு தொற்றாளர்களுக்கு அட்மிஷன் அளிக்கப்படும்.