ரஷ்யாவில், கடந்த 24 மணி நேரத்தில் 24,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,35,294 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் மேலும் 654 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1 லட்சம் 38 ஆயிரம் 579 ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 50,83,441 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 4,13,274 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக ரஷ்யாநாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.