ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த வரிசையிலும் விளையாட தயார்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பேட்டிங்கில் நான் எந்த வரிசையில் விளையாடுவதற்கு அணி நிர்வாகம் விரும்பினாலும் அந்த வரிசையில் மகிழ்ச்சியோடு பேட்டிங் செய்வேன் என்பதை தெளிவாக சொல்லிக்கொள்கிறேன்.  இந்திய வீரர்கள் அனைவரும் ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று விட்டதால் அணியின் இன்னிங்சை தொடங்கப்போது யார்? கோலி சென்ற பிறகு அந்த வரிசையில் யாரை ஆட வைக்கலாம் என்பதை கட்டாயம் முடிவு செய்திருப்பார்கள். நான் ஆஸ்திரேலியாவுக்கு சென்றதும் அனேகமாக எல்லாமே எனக்கு தெளிவாகி விடும். என்னை பொறுத்தவரை எந்த வரிசையில் பேட்டிங் செய்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை.

ஆஸ்திரேலியாவில் பந்து எகிறும் ஆடுகளங்கள் (பவுன்ஸ்) குறித்து பேசுகிறோம். கடந்த சில ஆண்டுகளில் அங்கு பெர்த்தை தவிர மற்ற மைதானங்களில் (அடிலெய்டு, மெல்போர்ன், சிட்னி) பந்து பெரிய அளவில் பவுன்ஸ் ஆகவில்லை. 2018-19-ம் ஆண்டில் நாங்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடிய போது எத்தனை பேட்ஸ்மேன்கள் பவுன்சர் பந்தில் ஆட்டம் இழந்தார்கள் என்பதை சொல்லுங்கள் பார்ப்போம். அதிவேக ஆடுகளமான பெர்த்தில் விளையாடிய போது கூட ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய மண்ணில் ஆடும் போது, நீங்கள் நன்றாக தொடங்கி விட்டாலே பாதி வேலை முடிந்தது என்று அர்த்தம். இப்போதெல்லாம் தொடக்க ஆட்டக்காரராக இறங்கும் போது ‘கட்’ அல்லது ‘புல்ஷாட்’ அடிப்பது குறித்து மட்டும் சிந்திப்பதில்லை. முடிந்தவரைக்கும் நேர்பகுதியில் பந்தை விரட்டுவதிலும் கவனம் செலுத்துகிறேன்- ரோகித் சர்மா 
Translate »
error: Content is protected !!