ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் கே.எல். ராகுல்.
ஐபிஎல் போட்டியின் 26-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வருடம் 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 3-வது வெற்றியைப் பெற்றுள்ளது.
ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. ராகுல் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பிறகு விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
பஞ்சாப் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ப்ரீத் பிரார் – கோலி, மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருது அவருக்கே வழங்கப்பட்டது. இந்த வெற்றியினால் பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் 91 ரன்கள் எடுத்த கே.எல். ராகுல், அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 7 ஆட்டங்களில் 331 ரன்கள் எடுத்துள்ளார் ராகுல். 311 ரன்கள் எடுத்துள்ள ஷிகர் தவன் 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். 270 ரன்கள் எடுத்துள்ள சிஎஸ்கேவின் டு பிளெசிஸ் 270 ரன்கள் எடுத்து 3-ம் இடத்தில் உள்ளார்.