அனல் பறக்கும் தேர்தல்… “20 இடங்களை” எளிதாக தட்டி தூக்கும் அதிமுக..! குஷியில் எடப்பாடி…

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் முக்கியமான 20 இடங்களில் அதிமுக கூட்டணி எளிதாக வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன. கிட்டத்தட்ட ப்ரீ ஹிட் போல அதிமுக கூட்டணி மிக எளிதாக இந்த 20 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தலுக்காக ஒரு பக்கம் திமுகவும். இன்னொரு பக்கம் அதிமுகவும் மிகப்பெரிய கூட்டணியை அமைத்துள்ளது. இது போக தேமுதிகஅமமுக கூட்டணியும், மநீமவும் இந்த தேர்தலில் மிகப்பெரிய மாற்றுகளாக தங்களை முன்னிறுத்தி வருகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 25 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பாக 40 இடங்கள் கேட்கப்பட்ட நிலையில் 25 இடங்களை மட்டுமே திமுக அந்த கட்சிக்கு ஒதுக்கி இருந்தது.

காங்கிரஸ் முன்பு போல இல்லை, அதிக இடங்களை கொடுத்தால் கண்டிப்பாக தோல்வி அடைந்துவிடுவார்கள். காங்கிரசுக்கு அதிக இடம் கொடுப்பது பெரிய ரிஸ்க். அதனால் முடிந்த அளவு குறைவாகவே கொடுப்போம் என்றுதான் திமுக மிகவும் கண்டிப்புடன் செயல்பட்டு வெறும் 25 இடங்களை மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்கியது. காங்கிரசுக்கு அதிக இடங்களை கொடுத்து ஏமாற்றம் அடைய திமுக தயாராக இல்லை.

ஆனால் திமுக கொடுத்த 25 இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்குள் காங்கிரஸ் படாதபாடு பட்டுவிட்டது. இந்த இடங்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதற்குள் காங்கிரசுக்கும் ஏகப்பட்ட கோஷ்டி மோதல் ஏற்பட்டுவிட்டது. ஒரு பக்கம் ஜோதிமணி வேட்பாளர் தேர்வு குறித்து கோபமாக டிவிட் செய்தார். கோபப்பட்ட ஜோதிமணி மீது கோபண்ணாவும் கோபம் அடைந்தார்.

இன்னொரு பக்கம் . சிதம்பரமோ தேர்தல் வேலை செய்ய ஆள் இல்லை என்று வருத்தப்படும் நிலை கூட ஏற்பட்டது. இப்படி காங்கிரஸ் கட்சிக்குள் தேர்தலுக்கு வெறும் ஒரு மாதத்திற்கு முன் கோஷ்டி மோதல்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கீழே தேர்தல் பணிகளை கூட செய்ய ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது . அந்த அளவிற்குள் காங்கிரஸ் கட்சிக்குள் கடுமையான தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது.

தற்போது காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் 25 தொகுதிகளில் 5 தொகுதிகளில் கண்டிப்பாக காங்கிரஸ் வெற்றிபெறும் என்கிறார்கள். விளவங்கோடுவிஜயதரணி, குளச்சல் – J.G.ப்ரின்ஸ், ஸ்ரீபெரும்புதூர்செல்வப்பெருந்தகை, ஓமலூர்ஆர்.மோகன் குமாரமங்கலம், விருதாச்சலம்எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் தேர்தலில் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் மீதமுள்ள 20 இடங்களை காங்கிரஸ் வெல்வது சந்தேகம்தான். அதோடு மீதமுள்ள 20 தொகுதிகள் அதிக கோஷ்டி மோதல் இருக்கும் தொகுதிகள். இங்கு காங்கிரஸ் கட்சியினரே அவர்களின் வேட்பாளர்களுக்கு வேலை பார்ப்பதில் நிறைய குழப்பங்கள் உள்ளன. நாங்கள் இவர்கள் அணி, நீங்கள் அவர்கள் அணி என்று காங்கிரசுக்குள் குழு குழுவாக பிரிந்து மோதிக்கொண்டு இருகிறார்கள் .

இதைத்தான் அதிமுக கூட்டணி தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக்கொள்ளும் என்கிறார்கள். காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளில் 20 இடங்களில் எப்படியும் வென்றுவிடலாம் என்று அதிமுக உறுதியாக நம்புகிறது. கோஷ்டி மோதல் , வேட்பாளர் தேர்வில் சொதப்பல் என்று பல்வேறு காரணங்களால் காங்கிரஸ் வேட்பாளர்களை எளிதாக வீழ்த்தி விடலாம் என்று அதிமுக கூட்டணி நம்புகிறது.

இதில் சில காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அவர்களின் தொகுதியில் போதிய ஆதரவு இல்லை. பலரின் பெயர் கூட அந்தந்த தொகுதிகளில் பிரபலம் இல்லை. காங்கிரசில் நிலவும் இந்த பூசல் காரணமாக திமுக ஒரு பக்கம் ஜெர்க்காகி இருக்க.,  இதை பயன்படுத்தி அதிமுக கூட்டணி 20 இடங்களை உறுதியாக வென்றுவிடலாம் என்று நம்பிக்கையில் இருக்கிறதாம்.

இதற்கு முந்தைய சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் டிராக் ரெக்கார்டும்.. அதிமுகவிற்கு நம்பிக்கை அளித்துள்ளதாம் . திமுக சில இடங்களில் கண்டிப்பாக வெல்லும். முக்கியமாக பாஜக திமுக எதிர் எதிராக போட்டியிடும் 14 இடங்களில் திமுக வெல்ல வாய்ப்புள்ளது. அதற்கு பதிலடியாக காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் 20 கைப்பற்றும் திட்டத்தில் அதிமுக கூட்டணி உள்ளது.

 

Translate »
error: Content is protected !!