அரசை அற்புதமாக வழிநடத்தி வருகிறார் ஸ்டாலின் – தோப்பு வெங்கடாசலம்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடச்சலம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் சேர்ந்தார். திமுகவில் அவரது ஆதரவாளர்கள் 905 பேர் அவருடன் சேர்ந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறியதாவது:-

முதல்வர் மு ஸ்டாலின் தலைமையில் அரசை அற்புதமாக வழிநடத்தி வருகிறார். முதலவர் மு ஸ்டாலினின் நடவடிக்கைகள் எங்களை ஈர்த்தன. இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக ஆட்சி செய்கிறார் முதல்அமைச்சர் ஸ்டாலின். அனைத்து கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு முதல்அமைச்சர் செயல்படுகிறார். இவ்வாறு கூறினார்.

 

Translate »
error: Content is protected !!