ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா அணியில் உமேஷ் யாதவ்க்கு பதிலாக நடராஜன் இடம்பெற்றுள்ளார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியில் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காலில் காயமடைந்தார்.

இதையடுத்து அவர் பாதியில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் பந்துவீச வரவில்லை. அவரது காய தன்மை குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. இந்த நிலையில் காயம் காரணமாக உமேஷ் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்  தொடரில்  தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!