இணையத்தில் வைரலாகும் காவ்யா மாறன்..!

சென்னை,

சமீப நாட்களாக இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறார் காவ்யா மாறன்.

மாறன் என்ற பெயரை கேட்டவுடன் கண்டிப்பாக சன் டிவி குழுமம் தான் நம் நினைவுக்கு வரும். ஆம்..சரிதான் சன் குழும நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் தான் இந்த காவ்யா மாறன்.

ஐபிஎல் போட்டிகளில் பங்கு பெரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாக இயக்குனர் இவர்தன்னுடைய அப்பாவான கலாநிதி மாறனுடன் ஐபிஎல் போட்டிகளை கண்டு களித்து வருகிறார். அவ்வப்போது விழும் பவுண்ட்ரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் இவர் எழுந்து நின்று கை தட்டியும் தங்கள் அணியின் கொடியை அசைத்தும் வீரர்களை மிகவும் உற்சாகப்படுத்துவார்..

இவர் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி பிறந்தார். 25 வயதான இவருக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது அளவுகடந்த பிரியமாம். இதனால் தான் கூட இவருக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாக இயக்குனர் பொறுப்பு கிடைத்திருக்கலாம். கிரிக்கெட் மட்டும் அல்ல இசை மீதும் இவருக்கு ஆர்வம் அதிகமாம். மேலும் இவர் சன் டிவியின் சன் மியூசிக் சானலில் தலைமை பொறுப்பிலும் உள்ளார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தற்போது வரை எவரையும் காதலிக்கவில்லை என்பதும் கூடுதல் தகவல். இவருடைய தாய் காவேரி மாறன் பன்முகத் திறமை கொண்டவர் என்பதோடு உலகின் மிகப்பெரிய பணக்கார பெண்மணிகளின் வரிசையில் இருப்பவர் என்பது நினைவிருக்கலாம்.

 

Translate »
error: Content is protected !!