இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,733 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று காரணமாக ஒரே நாளில் 930 பேர் இறந்தனர். மேலும் 47,240 பேர் கொரோனா தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர்.
நாட்டில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கை 3 கோடி 06 லட்சம் 63 ஆயிரம் 665 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடி 97 லட்சம் 99 ஆயிரம் 534 ஆகும். நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சம் 59 ஆயிரம் 920 ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 4 லட்சம் 04 ஆயிரம் 211 ஆக உயர்ந்துள்ளது.