இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா!

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில், 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியாஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இந்த போட்டிபாக்சிங் டேஎன்று பாரம்பரிய சிறப்புடன் அழைக்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீச்சைத் தொடங்கியதுஆஸ்திரேலியா அணியின் சார்பில் முதலாவதாக களமிறங்கிய ஜோ பர்ன்ஸ் (0) ரன் ஏதும் எடுக்காமலும், அவரைத்தொடர்ந்து மேத்யூ வேட் 30 ரன்களும், ஸ்டிவன் சுமித் (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 38 ரன்களும், மர்னஸ் 48 ரன்களும் எடுத்து வெளியேறினர். அவர்களைத்தொடர்ந்து கேமரான் கீரின் 12 ரன்களும், டிம் பெய்ன் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கி பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றனர். தற்போது ஆஸ்திரேலியா அணி 66 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளதுஇந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசி வரும் ஆர்.அஸ்வின் 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

 

Translate »
error: Content is protected !!