இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று அகமதாபாத்தில் நடந்தது

இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது செயல்பாடு உதவியாக இருக்கும் என புதிய தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.

இதில் தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுக்குழுவில் பல்வேறு முடிவுகள எடுக்கப்பட்டன. 2022-ம் ஆண்டு முதல் .பி.எல். போட்டியில் புதிதாக 2 அணிகள் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அது போல் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வாளர்களாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் சேத்தன் சர்மா, அபய் குருவில்லா, மொகந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

உறுப்பினர்களாக இருந்த ஜதின் பரஞ்சே (மேற்கு மண்டலம்), தேவங்காந்தி (கிழக்கு), சரன்தீப்சிங் (வடக்கு) ஆகியோரின் பதவி காலம் முடிவடைந்ததையொட்டி சேத்தன் சர்மா உள்ளிட்ட 3 பேர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய உறுப்பினர்கள் 3 பேரும் ஏற்கனவே பதவியில் உள்ள சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங்குடன் இணைந்து பணியாற்றுவார்கள். இதில் சீனியர் என்ற அடிப்படையில் சேத்தன் சர்மா இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.

 இந்திய கிரிக்கெட்டுக்கு மீண்டும் ஒருமுறை சேவை செய்வதற்கான வாய்ப்பை பெறுவது உண்மையில் எனக்கு கிடைத்த பாக்கியம். நான் சில வார்த்தைகளையே பேசுபவன். என் செயல்பாடு வார்த்தைகளை விட சத்தமாக பேசும். இந்திய அணிக்கு உதவிகரமாக இருக்கும் என்றார். இந்த வாய்ப்பை அளித்த கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். சேத்தன் சர்மா 23 டெஸ்ட், 65 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

 

Translate »
error: Content is protected !!